நடிகை சாயிஷா தெலுங்கு திரையுலகில் அகில் எனும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர், அஜய் தேவ்கனுடன் சிவாய் என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிலும் அறிமுகமானார். தமிழில் அவர் ஜெயம் ரவியுடன் வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, சிறந்த வரவேற்பை பெற்றார். அதன் பின்னர், 2018ஆம் ஆண்டு மட்டும் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, காப்பான் ஆகிய மூன்று தமிழ்ப் படங்களில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து டெடி,கஜினிகாந்த் போன்ற படங்களில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார், மேலும் 2019ஆம் ஆண்டு ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கவனிப்பதற்காக சினிமாவில் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியிருந்தார்.
தற்போது, சாயிஷா தனது சமூக வலைதளங்களில் குரு படத்தில் இடம்பெற்ற “மையா மையா…” பாடலுக்கு, வொர்க் அவுட் உடையில் கவர்ச்சியான நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.