Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய ‘லப்பர் பந்து ‘ படக்குழுவினர்! #LUBBER PANDHU

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

கிரிக்கெட் மையமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள், அதைத் தொடர்பான தங்கள் கருத்துகளை இணையதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர் படத்தைக் கண்டு மிகவும் பாராட்டியுள்ளனர்.

சிறப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் பாடல் “பொட்டு வெச்ச தங்க குடம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், கேப்டன் விஜயகாந்தின் பல குறிப்புகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. லப்பர் பந்து படக்குழுவினர், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தி, அங்கு அன்னதானத்தில் பங்கேற்றனர்.

- Advertisement -

Read more

Local News