Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

பிக்பாஸாக மாறிய குக் வித் கோமாளி ஷோ… முடிவுக்கு வராத பிரச்சினை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்நிகழ்ச்சியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு அதன் தொகுப்பாளர் மணிமேகலை விலகினார். இதற்கான காரணமாக அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த பிரியங்காவே கருதப்படுவதாக செய்திகள் வெளியாகின. மனிமேகலை தனது விலகலுக்கான காரணத்தை விளக்கிக்கொண்டு பிரியங்காவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அந்நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களுக்கு அவர் குறித்தே கூறியிருப்பது தெரிந்தது.

மணிமேகலை விலகியதோடு, அவர் யூடியூப்பில் அந்த சர்ச்சை குறித்து பேசியதால் அந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது. இதனால், அந்த நிகழ்ச்சியிலும், அதை ஒளிபரப்பி வரும் டிவி சேனலிலும் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். சமூக வலைத்தளங்களில், யூடியூப் தளத்தில் கமெண்ட் மற்றும் பதிவுகளாக அது தெறிந்தது.

அந்த சர்ச்சையை ஒதுக்கிவைக்காமல், கடந்த வார நிகழ்ச்சியிலும், இந்த வாரத்திற்கான புரோமோவிலும் அதற்கான குறிப்புகளை வைத்து இருந்தனர். இதனால், மீண்டும் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நேற்று யூடியூபில் வெளியான புரோமோவிற்கு ரசிகர்கள் தங்களது அதிருப்தியை கமெண்ட் செய்து வெளிப்படுத்தியுள்ளனர். “இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சி இப்படி தரம் குறைந்து விட்டதா?” என அவர்கள் கமெண்ட்களில் தெரிவிக்கிறார்கள். சமையல் நிகழ்ச்சியை சண்டை நிகழ்ச்சியாக மாற்றி பிக் பாஸ் போல உருவாக்கி விட்டனர் எனவும், நிகழ்ச்சியின் தரம் வீழ்ந்து விட்டதாகவும் கண்டித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News