Wednesday, September 25, 2024

காத்திருந்த ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வெளியான கேம் சேன்ஜர் படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்! #GAME CHANGER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கின்ற இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதேபோல், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் தமன் ‘கேம் சேஞ்சர்’ பற்றிய புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தமன், தனது எக்ஸ் பக்கத்தில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இரண்டாவது பாடலான “ரா மச்சா மச்சா” விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுபற்றி படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். பல நாட்களாக படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்த

- Advertisement -

Read more

Local News