பிரபல இந்தி நடிகை திரிப்தி டிம்ரி, “அனிமல்” படத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார். “அனிமல்” படம் ஆணாதிக்க சிந்தனைகளை வெளிப்படுத்துவதாகவும், பெண்களைத் தாழ்த்தி காட்டுவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியன. இந்த படத்தில் திரிப்தி டிம்ரி நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஒரு ரசிகர் “அனிமல், பேட் நியூஸ்” போன்ற படங்களில் கவர்ச்சிகரமாக நடித்த உங்களை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?” என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு திரிப்தி டிம்ரி காட்டமாக பதில் அளித்துள்ளார்.நான் இவ்வாறாக நடித்தது சரி. ஆனால் என்னோடு கவர்ச்சியாக நடித்த நடிகரின் கதாபாத்திரம் குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்? அவர் ஆண் என்பதாலா? ஆண் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம், இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார். அதே கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்தால் மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள்?ஒருவர் கவர்ச்சியாக நடித்தால், நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? ஒருவரை அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆண்களையும், பெண்களையும் ஒவ்வொரு விதமாகப் பார்க்காமல் நிறுத்துங்கள்,” என்றார்.