சமீபத்தில் மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பல திரைப் பிரபலங்கள் திறந்தவெளியாகப் பேச தொடங்கியுள்ளனர். இதேபோல, மற்ற திரைப்படத் துறைகளிலும் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையைப் பற்றி நடிகை சம்யுக்தா கூறியதாவது, ‛இன்றைய சினிமா, காட்டில் வழிதெரியாமல் மாட்டிக் கொண்டு இருப்பதைப் போல உள்ளது. இதைப் பயன்படுத்தி சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், அதற்காக இந்த ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் ஒரு கேம் சேன்ஜர் போல் அதாவது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more