Saturday, September 21, 2024

வேட்டையன் படத்தில் பிரகாஷ் ராஜ் ? அது எப்படி? #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் பல நட்சத்திரங்களின் கூட்டணியுடன் உருவாகியுள்ளது. இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, கிஷோர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அமிதாப் பச்சன், அவரின் முதல் நேரடி தமிழ் திரைப்படமாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில், அமிதாப் பச்சன் தனது கதாபாத்திரத்திற்கு அவர் சொந்தமாகவே குரல் கொடுத்துள்ளார். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகர் பிரகாஷ் ராஜ், அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

அமிதாப் பச்சனின் குரலுக்கு அதிக நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் சில இடங்களில் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News