Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என்னுடைய இரண்டாவது படமும் வெற்றி படமாக அமையும்… லெஜன்ட் சரவணன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி லெஜண்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லெஜன்ட் சரவணன் எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், கருடன் போன்ற பல வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜன்ட் சரவணன் அவர் நடிக்கும் இரண்டாவது படம் குறித்து பேசினார். அதில், தூத்துக்குடி துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.படத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என்றார். மேலும், அண்மையில் வெளியான மகாராஜா, டிமான்டி காலனி, கருடன் போன்ற படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகமான இருந்தது. அது போன்ற ஒரு கதையில் தான் நான், நடித்து வருகிறேன். என்னுடைய படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கும், என் முதல் படம் வெற்றி படம் இரண்டாவது படமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News