Saturday, September 14, 2024

நான் ஏன் சோசியல் மீடியா பக்கம் வரவில்லை தெரியுமா? ராஷ்மிகா மந்தனா சொன்ன அதிர்ச்சி காரணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களால் “நேஷனல் க்ரஷ்” என்று அழைக்கப்படுகிறார். அவர் கடைசியாக நடித்து வெளியான அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், 900 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ராஷ்மிகா மந்தனா ஹிந்தி பட உலகில் இன்னொரு வெற்றியை சாதித்துள்ளார். அடுத்ததாக, அவர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக “குபேரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறிய விபத்தில் சிக்கியுள்ளார். இது குறித்து, அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்: கடந்த மாதம் எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே இருந்தேன். இப்போது காயத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன். நாளை இருப்போமா என்று தெரியாது, ஆகவே ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News