Monday, November 18, 2024

கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்திற்கு முன்பாக காலை 8 மணியிலிருந்து அனைவருக்கும் ‘இலவச மருத்துவ பரிசோதனை, இலவச கண் பரிசோதனை’ நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி ஆகிய இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மேலும், மூத்த கலைஞர்களான காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி. கலாவதி, எம். கலாவதி, எம்.ஆர். சோலைவள்ளி, எம். காமராஜ், பிரசாத், வி.சி. ராஜேந்திரன், எம். ஏ. பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட உள்ளது.

- Advertisement -

Read more

Local News