Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிங்கந்தர் படப்பிடிப்புக்கு இவ்வளவு கோடியில் பிரம்மாண்ட செட்டா? மிரள வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ ஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார், அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துடன் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இதில் வில்லனாக சத்யராஜும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது. 

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தாராவியில் சில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாக தகவல். இதற்காக தாராவி போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டு வருகிறது, இதற்காக ரூ. 15 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News