மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி, தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தவர். தற்போது, அவர் முதன்முறையாக தமிழில் தயாராகும் புதிய ஒரு வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த தொடரை சதீஷ் ராஜா தர்மர் இயக்குகிறார். ‘தீவினை போற்று’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர், 1990-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டது, அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பாரதிராஜா, சத்யராஜ், பாபு ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விதார்த் மற்றும் கலையரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாலி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த வெப் தொடர், சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது.