சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் டிவியில் நிறைய தொடர்கள் கிளைமாக்ஸை நோக்கி நெருங்கி வருகின்றன. அதேசமயம் பல புதிய தொடர்களுக்கான அப்டேட்டும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் டெலி பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் கதிரவன் பிரான்சிஸ் இயக்கும் புதிய தொடருக்கான அப்டேட்டை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சிவன் கோவில் புகைப்படத்துடன் புதிய மாதம் புதிய தொடக்கம் போன்ற ஹேஸ்டேக்குகளை பதிவிட்டுள்ளது. சீரியலுக்கான டைட்டில் ஹீரோ ஹீரோயின் போன்ற தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
