கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ என்ற கிராமத்தின் சுற்றுப்புற வாழ்க்கையை மையப்படுத்தி நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘கெவி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார், ஷீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும், விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை பாலசுப்பிரமணியம் செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் தமிழ் தயாளன், “நாங்கள் ஒரு மலைகிராமத்தின் கதையை உருவாக்கி அதற்கான இடத்தை தேடுவதற்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தோம். அது ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது, அங்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. நாங்கள் உருவாக்கிய கதை உண்மையான சம்பவங்களுடன் பொருந்தியது, எங்களுக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது, என கூறினார்.
படப்பிடிப்பு 110 நாட்கள் வெள்ளக்கெவி பகுதியில் கோடை மற்றும் குளிர் காலங்களில் நடைபெற்றது. தங்குவதற்கு இடம் கிடைக்காததால், தனியார் டெண்டில் தங்கியிருந்தோம். கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கும் போது பெரும் புயல் வீசியது; அதிலிருந்து தெய்வாதீனமாக தப்பினோம்,” என்கிறார் இயக்குனர்.