தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நிவேதா தாமஸ், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ மற்றும் ரஜினியுடன் ‘தர்பார்’ படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, நிவேதா தாமஸ் நடித்துள்ள படம் ’35 சின்ன கதை காடு’ ஆகும். இந்தப் படம் கடந்த சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் பல படங்கள் வெளியானதால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போனது.பின்னர், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வரும் 6-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் புரொமோஷனின்போது, நிவேதா தாமஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 35சின்ன கதை காடுஜஒரு எளிமையான மற்றும் வசீகரமான கதை. இதில் நான் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் வீட்டுத்திருப்பாளராக நடித்திருக்கிறேன். இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு நடிகராக, அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘நான் அம்மாவை விட சரஸ்வதியாக அருமையாக நடித்தேன்’ என்று நீங்கள் நினைத்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிவேதா எந்த வேடத்திலும் நடிப்பார் என்று இயக்குநர்கள் நம்புவதை விட ஒரு நடிகைக்கு பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை, என்றார்.