Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனது தாயின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஜூனியர் என்டிஆர்… என்ன ஆசைன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த படம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றது.

இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவரா’ படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த படம் பான் இந்தியா படமாக வெளியிடப்படும் நிலையில், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அவரின் அம்மா தனது சொந்த ஊரான குந்தப்புராவில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அந்த ஆசையை நிறைவேற்றியதாக ஜூனியர் என்டிஆர் தெரிவித்தார். அவரது மனைவி, நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் பிரஷாந்த் நீல் ஆகியோருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்ததாக கூறியுள்ளார். தனது அம்மா ஷாலினியின் பிறந்தநாளான செப்டம்பர் 2 இல் இதனை சிறப்பான பிறந்தநாள் பரிசாகக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். அதன் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், கோயில் வாசலில் அவரை ஏராளமான ரசிகர்கள் சந்தித்து தங்களது உற்சாகத்தை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News