கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை ரிமி ரூ.92 லட்சம் கொடுத்து புதிய லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ளார். புதிய கார் வாங்கியதில் இருந்தே, அதில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக ரிமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காரில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நிறுவனம் சார்பில் முறையான தீர்வு வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான ரிமி நீதிமன்ற படிகளை ஏறியுள்ளார்.இது தொடர்பான மனுவில் காரால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் தனக்கு ரூ. 50 கோடி நஷ்ட ஈடு, வழக்கை நடத்துவதற்கு ரூ.10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாழாகி இருக்கும் காரை மாற்றிக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000066541.jpg)