யோகி பாபு வேட்டைக்காரனாகவும், நடிகர் காளி வெங்கட் வில்லனாகவும் மருத்துவனாக நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள படம் மலை.இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இசையமைப்பாளர் டி இமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கண்ணசர ஆராரோ’ என்ற பாடலை தயாரிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பாடலை பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more