Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

காதில் பூ… விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த நடிகை ஷிவானி !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார். அப்போதே 2 மில்லியன் ரசிகர்களைக் கொண்டிருந்த ஷிவானி நாராயணன், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களையும் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு தற்போது 4 மில்லியன் ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஷிவானி நாராயணன், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்த ஷிவானி, 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி நடித்த பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தனது உடல் எடையை கணிசமாக குறைத்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து மேலும் ஒர்க்கவுட் செய்து வருகிறார். அவர் தனது காதின் மேல் பூ வைத்துக் கொண்டு மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News