Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன் ‘ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனானவர் சண்முக பாண்டியன். “மதுரை வீரன்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, சண்முக பாண்டியன் புதிய படமொன்றில் நடித்துள்ளார்.”வால்டர்” மற்றும் “ரேக்ளா” படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு “படை தலைவன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

“எக்ஸெம் லீ (Directors Cinemas)” தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றியுள்ளார். புதுமையான திரைக்கதையில் முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்துடன் பரபரப்பான திருப்பங்களும் இணைந்துள்ளன.

திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. தற்போது, படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News