Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

விஜய் எங்கள் வீட்டு பிள்ளை தான்… தி கோட் படக்குழு நேரில் சந்தித்தது குறித்து பகிர்ந்த பிரேமலதா விஜயகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்னும் ஒரு சில வாரங்களில் திரையிடப்படவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. GOAT படத்தின் பாடல்களுக்கு பெற்ற விமர்சனங்களைப் போலவே, படத்தின் ட்ரைலருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து ரசிகர்களும் GOAT ட்ரைலரை ஆர்வமுடன் கொண்டாடினர். யூடியூபில் பல சாதனைகளை GOAT ட்ரைலர் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், GOAT திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நடித்துள்ளார் என கூறப்பட்டது.

இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், விஜயகாந்த் அவர்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த அனுமதி அளித்த அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை, விஜய் உட்பட, வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவின.

இந்தச் சூழ்நிலையில், அந்த சந்திப்பின் போது நடந்த விவரங்களைப் பற்றி சமீபத்திய பேட்டியில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். “விஜய் எங்களைச் சந்தித்தது சாதாரண விஷயம் தான். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை சிறு வயதிலிருந்தே நாங்கள் அறிவோம். விஜய் எங்கள் வீட்டுப் பையன் தான். விஜயகாந்த் GOAT படத்தில் ஏ.ஐ. மூலம் வருவது அனைவருக்கும் தெரியும். படத்தில் அவர் வரும் காட்சி மிகப்பிரம்மாண்டமாக இருக்கும், எனவும் குடுபத்துடன் கோட் படம் பார்க்க அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News