Saturday, September 14, 2024

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துல இத்தனை பிரபலங்களா? ஓ மை காட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல், உலகமே வியந்து பார்க்கும் ஆஸ்கார் விருதை தனது சகோதரர் வெல்வதில் உறுதுணையாக இருந்தவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் பல படங்களை இயக்கியிருந்தாலும், பாகுபலி படம் மூலம் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு, இவரது இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தெலுங்கு சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி, இன்று உலகளவில் போற்றப்படும் இயக்குநர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது அடுத்த படம் நடிகர் மகேஷ் பாபுவுடன் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது, இதனால் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வேகமாக பரவி வரும் தகவலின் படி, மகேஷ் பாபுவின் 29வது படத்தில், தமிழ் திரையுலகில் இருந்து விக்ரம், மலையாள திரையுலகில் இருந்து மோகன் லால் மற்றும் பிருத்விராஜ் நடிக்கவுள்ளனர்.

மேலும், தெலுங்கு திரையுலகில் இருந்து நாகர்ஜுனாவும் நடிக்கவுள்ளார். பாலிவுட்டில் இருந்து நடிகை தீபிகா படுகோனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீபிகா படுகோனுக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ளதால், இந்தப் படத்தில் அவரால் எந்த அளவிற்கு நடிக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அண்மையில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படத்தில் சிறப்பாக நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தது.

இந்திய சினிமாவில் இருந்து இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சினிமாக்களில் இருந்து இருவரும் இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, ஆஸ்திரேலிய நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க உள்ளதாகவும், மேலும் ஒரு வெளிநாட்டு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News