மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வாழை.” மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை இன்று வெளியாகியுள்ளது.
படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன், பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“வாழை” படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டியணைத்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்னர், சிறிது நேரம் மாரி செல்வராஜின் பக்கத்தில் அமர்ந்த பாலா, அவரை ஆசுவாசப்படுத்தினார்.