பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திவ்ய பாரதி, இந்தப் படத்தில் தனது நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக, திவ்ய பாரதி நடித்த கதாபாத்திரம் பாராட்டுகளுக்குப் புறக்கணிக்கப்படவில்லை. படத்தில் சில கவர்ச்சியான காட்சிகள் இருந்த போதிலும், க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் தொடர்ந்து உள்ளார்.
சமீபத்தில், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.