Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகர் சிவராஜ் குமாரும் நடிகர் யஷ்-ம் திடீர் சந்திப்பு… #Shivanna131

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் மக்களின் மனதில் ஆழமான இடம் பிடித்தார்.

தற்போது அவர் தனது 131-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் தொடங்கியது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

இந்தப் படம், கார்த்திக் அத்வைத் இயக்கும் முதல் கன்னட திரைப்படமாகும். அவர் இதற்கு முன் “பாயும் ஒளி நீ எனக்கு” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.இந்நிலையில், இன்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யாஷ், சிவ ராஜ்குமாரை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் அங்கு பேசினர். இவர்களின் சந்திப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News