நடிகர் விக்ரமின் மகனான துருவ், ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து அறிமுகமானார். ஆனால், அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்காமல் துருவ் ஒரு பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன் காளமாடன்’ என்ற படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தென் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்தவுடன், துருவ் விக்ரம் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, துருவ் விக்ரம் தெலுங்கில் நாக சைதன்யாவோடு இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.