தென்னிந்திய சினிமாவைத் தாண்டி, நடிகை ராஷ்மிகா தற்போது ஹிந்தி சினிமாவிலும் புகழ் பெற்றுள்ளார். தற்போது, அவர் தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் குபேரா, மற்றும் ஹிந்தியில் ஜாவா மற்றும் சிக்கந்தர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவை குறித்து அவர் கூறும்போது, சினிமாவுக்கு ஏற்ற முகம் இல்லை என்று கூறி பலரும் என்னை ஆரம்பத்தில் நிராகரித்தார்கள். ஆடிஷனுக்கு சென்று, வீடு திரும்பும் போது என் கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது. சுமார் 25 படங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருப்பினும், தொடர்ந்து முயன்றேன். கடுமையாகப் போராடி ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மூன்று மாதங்கள் பயிற்சியோடு செலவிட்டேன். பின்னர், அந்த படம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி, இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்கவேண்டும் என்பதே எனது ஆசை என அவர் தெரிவித்தார்.