Saturday, September 14, 2024

யோகி பாபு நடிக்கும் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் டீசர்‌ வெளியீடு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கி புகழடைந்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த மாமனிதன் படம் விமர்சகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது, சீனு ராமசாமி தனது அடுத்த படமான கோழிப்பண்ணை செல்லதுரை எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். யோகி பாபு மற்றும் சில புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News