Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

துணிச்சலாக நிற்கும் உங்களது திறன் போற்றத்தக்கது… ஒலிம்பிக் வீராங்கனைக்கு ஆறுதல் கூறிய நடிகை சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று இறுதிப் போட்டி நடைபெற இருந்த நிலையில் உடல் எடை சில கிராம்கள் வரை கூடியதின் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வினேஷ் போகத்துக்கு பிரபலங்கள் ஆறுதலாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிரமமான தருணங்களில் துணிச்சலாக நிற்கும் உங்களது திறன் போற்றத்தக்கது என நடிகை சமந்தா ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், சில சமயங்களில், மிகவும் உறுதித்தன்மை வாய்ந்த மனிதர்களுக்கே கடினமான இடையூறுகள் வரும். நீங்கள் தனி ஆள் அல்ல, உங்களுக்கும் மேலே ஒரு சக்தி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுள்ளது. சிரமமான தருணங்களில் துணிச்சலாக நிற்கும் உங்களது திறன் போற்றத்தக்கது. எப்போதும் நாங்கள் உங்களுடன் நிற்போம் இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News