சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றார் என தகவல்கள் வெளியாகியது. அதனையடுத்து அவர் என்ன கார் வாங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் லெக்ஸஸ் காரை வாங்கியிருபதாக கூறப்படுகிறது. இந்த மாடல் காரைத்தான் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

