Tuesday, November 19, 2024

பார்வையாலேயே ரசிகர்கள் மனதை கொத்தி சென்ற நடிகை மீனாட்சி சௌத்ரி… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மீனாக்ஷி சவுத்ரி தற்போது பிசியான நடிகையாகியுள்ளார். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். இதன் காரணமாகவே சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது. 2019ம் ஆண்டு ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் 3 படங்களில் நடித்தார். தமிழில் “கொலை” படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதில் விஜய் ஆண்டனியும் நடித்திருந்தார்.

மகேஷ் பாபு இயக்கத்தில் வெளிவந்த “குண்டூர் காரம்” படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி நடித்து வெளியான “சிங்கப்பூர் சலூன்” படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது, விஜய் நடித்து வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் விஜயுடன் நடனமாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் “ஸ்பார்க் பாடல்” என சொல்லி படக்குழு வெளியிட்டது. இந்த பாடலில் விஜயின் முகத்திற்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டிருந்தது. “கோட்” படத்திற்கு பின் தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என மீனாக்ஷி நம்பி காத்திருக்கிறார். அதேசமயம் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து வருகிறார் மீனாக்ஷி சௌத்ரி. தற்போது மார்டன் சேலையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News