அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா விரைவில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ எனும் படத்தை இயக்கவுள்ளார். இதில் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ.300 கோடி என கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000047181-1024x585.jpg)
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது, த்ரிஷாவை இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000050926-1024x846.jpg)
பிரபாஸ், த்ரிஷா இதற்கு முன்பு ‘வர்ஷம்’, ‘புஜ்ஜி காடு’, ‘பௌர்ணமி’ ஆகிய மூன்று படங்களில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.