சின்னத்திரை மூலம் பிரபலமானவர் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த சீசனில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது ஆனால் டைட்டில் வின்னராக மாற முடியவில்லை.
இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட தினேஷை விட்டு தற்போது தனியாகவே வாழ்ந்து வருகிறார். இப்போது ஃபையர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் ரச்சிதா. இதில் ஃபையர் படத்திற்கு சம்பளமே வழங்கவில்லை என தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் வெள்ளை நிறத்தில் பேண்ட்டும், இள ஆரஞ்சு நிறத்திலான டி ஷர்ட்டையும் அணிந்தபடி கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.