Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவில் சோதனை முயற்சி செய்யும் இயக்குனர்கள் அதிகம் உண்டு. திரைக்கதையில் ஒளிப்பதிவில் என பலதரப்பட்ட சோதனை முயற்சி திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போதைய வாழ்வியல் அரசியல், சமூக அவலநிலை ஆகியவற்றை வைத்து ஒரு தனி உலகத்தைச் கற்பனையாக உருவாக்கி அதைனை ரசிகர்களிடத்தில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி.கே கொண்டு வந்து டெஸ்ட் செய்துள்ளார்.

அறம் தொலைத்து வாழும் அயோக்கியர்கள் அதிகமாகவும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களைச் சகிக்க முடியாத யோக்கியர்கள் குறைவாகவும் வாழும் கற்பனை உலகுதான் கதைக் களம். அதில் நாயகன் வாசுதேவன் (நகுல்) ஒரு யோக்கியன். தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நாலு பேரைப் போலீஸிடம் பிடித்துக் கொடுத்த காரணத்துக்காக ‘லாக் அப்’பில் வைக்கப்படுகிறான்.

அவனைப் பிணையில் எடுக்க வருகிற அவனுடைய அண்ணன் மகாதேவனிடம் “ரோட்ல போறவர பொம்மளைங்ககிட்ட நிம்மதியா செயினைக் கூட அடிக்க விடமாட்டேங்கிறான் சார் உங்க தம்பி. அப்படியே உங்க அப்பா மாதிரி யோக்கியனா இருக்கிறான். வாஸ்கோடகாமாவுக்கு அனுப்பி வைக்க வேண்டிய ஆள் இவன். இந்தச் சமூகத்துக்கு லாயக்கு இல்லை” என்கிறார். ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரிலிருந்து மாநகரத்துக்கு வரும் வாசுவுக்கு ‘அயோக்கிய வாசிகள் குடியிருப்பு’வில் ‘இவன் கெட்டவன்’ என்று பரிந்துரை செய்து வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கிறார் அவனுடைய சித்தப்பா முனீஸ்காந்த். வீட்டின் உரிமையாளருடைய மகளோ, வாசுவின் பள்ளிப் பருவ தோழி. அதை இருவரும் அடையாளம் கண்டுகொண்டு காதலித்து திருமணம் வரை வந்துவிடுகிறார்கள்.

ஆனால் திருமண நாளன்று வாசு யோக்கியன் என்பது தெரிந்துபோய், திருமணம் நின்றுவிடுகிறது. இனி வேறு வழியே இல்லாத நிலையில் ‘வாஸ்கோடகாமா’ சிறைக்கு வாசு அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த விநோதமான சிறையில் வாசுவின் ‘டாஸ்க்’ என்ன, அதில் அவர் ஜெயித்தாரா என்று செல்கிறது கதை.

கே.எஸ்.ரவிகுமார் தொடங்கி படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். எல்லோரும் இயக்குநர் சொன்னதை, ‘ஏன், எதற்கு?’ என்று காரணம் கேட்காமல் மந்தைகளைப் போல் மண்டையை ஆட்டியபடி நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். தலைகீழ் உலகத்தில் வெடித்துத் தெறிக்கும் அவல நகைச்சுவையின் கொண்டாட்டமாக மாறியிருக்க வேண்டிய படத்தில், இயக்குநரின் அறியாமையே திரைக்கதை நெடுகிலும் நகைச்சுவையாகிறது.கற்பனையான தலைகீழ் சமூகத்தில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை நகைச்சுவை எந்தக் காட்சியிலும் சூல் கொள்ளவில்லை. இப்படியும்கூட ஒரு சிறை இருக்க முடியுமா என்று தெரிந்துகொள்ள நினைத்தால் ‘வாஸ்கோடகாமா’வுக்கு சென்று பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News