Saturday, September 14, 2024

நான் விஜய் சாரை சீட்டிங் பண்ணது உண்மை தான்… வாரிசு படப்பிடிப்பு போது கிரிக்கெட் விளையாடியதை பற்றி யோகி பாபு பகிர்ந்த சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “போட்” படம் நாளை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் முன்னதாகவே வெளியிடப்பட்டு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் யோகி பாபு ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சின்னி ஜெயந்த், கௌரி கிஷனுடன் சேர்ந்து கல்லூரி மாணவர்களுடன் பேசிய யோகி பாபு, விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட் குறித்து விவரித்துள்ளார். வாரிசு படத்தின் படப்பிடிப்பின் இடையில் விஜய் மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதாகவும், விஜய்யிடம் சில தந்திரங்கள் செய்ததாகவும் யோகி பாபு கூறினார். விஜயின் டீம் சிக்ஸர் அடித்த போது, அதைப் ஃபோர் என கூறி தானே போங்காட்டம் ஆடியதாகவும், ஆனால் விஜய் இதற்கு சண்டையிட்டு, அதை சிக்ஸராக மாை ற்றியதாகவும் யோகி பாபு சிரித்தபடி தெரிவித்தார்.

அந்த நேரத்தில் மூன்று போட்டிகளை விளையாடியதாகவும், விஜய் கீழே விழுந்து ஃபீல்டிங் செய்ததாகவும் யோகி பாபு கூறினார். தனக்கு கிரிக்கெட், ஃபுட்பால் இரண்டுமே மிகவும் விருப்பமான விளையாட்டாக இருப்பதாகவும், அவற்றை ஓய்வு நேரத்தில் தொடர்ந்து விளையாடி வருவதாகவும் யோகி பாபு மேலும் குறிப்பிட்டார். இதனைத் தவிர, மாணவர்களின் அடுத்த கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு, லொள்ளு சபா காலத்தில் இருந்த அதே மனநிலையுடனே இன்றும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News