Tuesday, November 19, 2024

அறிவுள்ள ரசனையாளர்களுக்கு மட்டுமே ‘ராயன்’ திரைப்படம் – ஒரு வித்தியாசமான விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷின் ராயன் பற்றி ஒரு வித்தியாசமான விமர்சனம்வெளிநாட்டு படங்களுக்கும் இந்திய படங்களுக்கும் உள்ள வேறுபாடு

* காட்சிகளை லாஜிக் என்ற பெயரில் நியாய படுத்த வளவளவென்று காட்சிகளை நீள படுத்த மாட்டார்கள். ஏன் எப்படி எதற்கு என்பது ரசிகர்களின் ஊகத்துக்கு விடப்படும். சொன்னதை விட சொல்லாதது அதிகமிருக்கும்.

*எப்பேர்ப் பட்ட திறமை மிகு நடிகர்களானும் ஒரு காட்சியோ அரை காட்சியோ அவரை சுற்றி பிரத்யேக ஒளி வட்டம் இருக்காது.அவர்கள் ஒரு செட் ப்ராபர்ட்டி போல காட்சியுடன் பொருந்துவார்கள்.

*ஹீரோ என்று சொல்ல படுபவர் பாயிண்ட் ஆஃப் வியூவில் கதை விரியும் . அவருக்கு இண்ட்ரோ சீன் , பில்ட் அப் இருக்காது.

*காட்சிகள் கதையின் மையத்தை சுற்றி அமையுமே தவிர , நெஞ்சை நக்கும் அநாவசிய காட்சிகளோ , அநாவசிய நியாயம் தேடலோ , விளக்கமோ , பார்வையாளர் தொடர்பு என்ற பழைய கூத்து மரபு தொன்மங்களோ அறவே இருக்காது.

நவீன தமிழ் படங்கள் இவற்றை தவிர்க்க. முயன்றாலும் அதிர்ச்சி மதிப்பீடு காட்சிகள் ( shock value), திருப்பங்கள் , முடிச்சுகள் போன்றவை எல்லா வகை படங்களிலும் இடம் பெறுகிறது. இந்த மாதிரி எந்த வலையிலும் சிக்காத அற்புத படைப்பு தனுஷ் என்ற மகா இயக்குனரின் மேலைநாட்டு படங்களை நெருங்கிய ராயன்.

வன்முறை நியாய படுத்த படுவது
என்பது எவ்வளவு அநியாயமோ அவ்வளவு அநியாயம் வன்முறை அநியாயப் படுத்த படுவது. உலகிலேயே ஆடம்பரம். எதுவென்றால் அம்பானி வீட்டு கல்யாணமென்பீர்கள். ஆனால் உலகிலேயே அதிக ஆடம்பரம் எந்த குற்றமும் செய்யும் அவசியமின்றி அமைதி வாழ்வு வாழ்வதே.

அவன் வாழ்வின் தேர்வை செய்யும் நிலையில் அவனில்லை. அவன் தனியானவனும் இல்லை. அதனாலேயே வரம்புகளற்ற தேர்ந்தெடுப்பு சுதந்திரம் அவனுக்குண்டு. அவன் தேர்ந்தெடுப்பது குடும்பத்தை முன்னேற்றுவது என்பதே மிகை. அவன் தேர்ந்தெடுப்பது சக ஜீவிகள் தெருவில் தங்கி உண்டு உறங்கி வாழ்வது போல் அவனும் அவன் குடும்பமும் வாழ்வதே அவன் தேர்ந்தெடுப்பது.

அவன் தனக்கு காட்டிக் கொள்ளும் ஒரே சலுகை தங்கை மேல் வைக்கும் கூடுதல் அன்பு.அவன் தம்பிகளின் நோக்கங்கள் அதுவல்ல என்பது தவறுமல்ல. ஒரு தம்பிக்கு பணம் , பெண் என்றால் , மறு தம்பிக்கு அதிகார போதை. ஆனால் குடும்பத்திடம் ஒட்டியும் ஒட்டாத வறண்ட உறவுமுறை தம்பிகளுக்குள் இணைப்பை கொடுத்து எந்த சூழலிலும் அனுசரிக்க வைக்கிறது.வன்முறையை வைத்து காசு பணமோ அதிகாரமோ தேடாமல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒருவன் , அவன் இருத்தல் தேவைக்கு மட்டுமே தன்னை காக்க வன்முறைக்கு தள்ள படுகிறான் என்பதே உள்ளாடும் அபத்த சோகம்.

அவன் பெற்றோர்கள் வீடு திரும்பாததை ஒரு சம்பவமாக ஆக்கும் வலிமை அவனுக்கில்லை அதை பற்றிய அக்கறை பட ஆளுமில்லை. நம்பிய ஒருவனும் சிறுமியை விற்று காசாக்க முயல, ராயனின் முதல் தற்காப்பு கொலை அரங்கேறுகிறது.பிறகு அடுக்கடுக்காக விரியும் அதிகார போட்டியில் , தம்பிக்காக சிக்கி இரண்டாம் தற்காப்பு கொலை அரங்கேறுகிறது. எதிரியை கொலை செய்தவனை நண்பன் என்று கொண்டாடாமல் , தன்னை விஞ்சி விடுவானோ என்ற சந்தேகத்தில் உருவாகும் பகை , உறவுகளை பகையாக்க , தனியனாக போராட , சகோதரி கரம் கொடுக்கிறாள்.

சட்ட துணையுள்ள அதிகாரமோ ,அவர்கள் கையை வைத்தே அவர்கள் கண்ணை குத்தி தன் நோக்கத்தை முடிக்க ,ராயன் குறைந்த சுமைகளுடன் வேறு பயணத்தை தொடருகிறான்.முதல் பாதியில் அவன் இருத்தல் பிரச்சினையை உறவுகளை உறவின் திரிபுகளை சொல்ல , இரண்டாம் பாதியில் அவனாலோ , மற்றவர்களாலோ , பார்வையாளர்களாலோ யூகிக்க , யூகித்தாலும் தவிர்க்க முடியாத வன்முறை வெறியாட்டம் ஆடுகிறது. இதற்கு நியாயம் செய்வது இதன் உள்ளடக்கமே.

அவன் இருப்பிடம் , தொழில் புழங்குமிடம் , வன்முறை வெறியாடும் இடங்களுக்கு எவ்வளவு வெளிச்சம் வேண்டுமோ அவ்வளவே படத்தில். அவன் குணநலன் இருப்பை சாத்தியப் படுத்தவோ போராடுபவனின் எச்சரிக்கை கலந்த மத்திய மனநிலை.

திரைக்கதை , வசனம் , இயக்கம் ,காமிரா செட்டிங் , எடிட்டிங் எல்லாமே அபார நேர்த்தியுடன் உண்மை கலை விரும்பிகளின் தேவையை பூர்த்தி செய்கின்றன.நடுவில் மறந்திருந்த தன் திறமையை ரஹ்மான் மீண்டும் தனக்கே நினைவு படுத்தி கொண்டு படத்தின் ஜீவனை ,சூழலை, உணர்வை மேம்படுத்தியுள்ளார் என்பதில் சந்தேகமேயில்லை.

சராசரி பார்வையாளர்களுக்கு இது எந்த விதத்தில் மன இணைப்பை கொடுக்கும் என்பது சந்தேகமே. இந்தப் படம் எதையும் உரத்து பேசாமல் , பார்வையாளர்களை பரிதாபம் கொள்ள வைக்க கெஞ்சாமல் , கதறாமல் , அவர்களிடம் எல்லாவற்றையும் விளக்கி நியாய படுத்தாமல் , ஆறு போல ஓடுகிறது. படத்தை ஒரு கிளர்ச்சிக்காக பார்க்காமல் , உணர்வு பூர்வமாக அணுகும் தேர்ந்த பார்வையாளர்கள் ராயனில் தோயலாம்.அவன் இருத்தலில் உள்ள போராட்டத்தில் அவனுடன் மானசீகமாக களமாடலாம்.

இது விவாதிக்க வேண்டிய படம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்தியன் 2 மாதிரி புறந்தள்ள பட வேண்டிய படமல்ல.இன்றைய வெவ்வேறு அழகியல்( அபத்த அழகியல் , வன்முறை அழகியல் , வாழ்வியல் அழகியல் ) , சினிமா மொழியியல் என்று உலக அளவில் உன்னதம் தொட முயல்கிறது.

மேம்போக்கான சினிமா பர்வையாளர்கள் தள்ளி போய் விளையாடலாம். – கோபால்

- Advertisement -

Read more

Local News