Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இவர்கள் இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்ய தயார்… இயக்குநர் அமீர் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா கலைஞர்களில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே அரசியல் குறித்தும் சமூகம் குறித்தும் மிக தைரியமாக எல்லா காலகட்டத்திலும் பேசக்கூடியவர்களில் இயக்குநர் அமீரும் ஒருவர். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து எந்த படமும் எடுக்க இயலாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும்.

தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது, என்றார்.விஜய் அல்லது சீமான் இவர்களில் யாருடன் அரசியலில் பயணம் செய்ய உள்ளீர்கள் என கேள்விக்கு, விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News