ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கி தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன், ரெடி ஸ்டெடி கோ உள்ளிட்ட சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை சொந்தமாக்கிக் கொண்டவர் ரியோ ராஜ். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரவேற்பை பெற்ற பெரிய ராஜ், சினிமாவில் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000045056-816x1024.jpg)
தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஜோ படம் அவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் ரியோவுடன் இணைந்து மாளவிகா மனோஜ் நடித்திருந்தார். இந்நிலையில் இதே கூட்டணி அடுத்ததாக மற்றொரு படத்திலும் நடித்து முடித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000044588-1024x683.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000044587-1024x683.jpg)
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.