Tuesday, November 19, 2024

எனது பேரன் விஜய் ஸ்ரீஹரி மாமன்னன் ராஜராஜ சோழனின் பரம்பரை… நடிகர் விஜயகுமார் பெருமிதம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வனிதா விஜயகுமாரின் மகனும் நடிகர் விஜயகுமாரின் மகனுமான விஜய் ஸ்ரீஹரி. இவர் அறிமுகமாகும் படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். படத்திற்கு ‘மாம்போ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் தயாரிக்கிறார்.

படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜயகுமார் பேசியதாவது: எனது பேரன் விஜய் ஶ்ரீஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றினார். பள்ளியில் படிக்கும்போதே மாணவர் தலைவராக இருந்தார். லண்டனுக்கு சென்று சினிமா பற்றிய எல்லா படிப்புகளையும் படித்தார்.

அவர் நடிகனாக வேண்டும் என்று விரும்பியபோது ரஜினியிடம் அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டேன், நல்ல இயக்குனர் நல்ல தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிமுகப்படுத்துங்கள் என்றார். அவர் என் பேரனுக்கு சினிமாவில் ஜெயிக்க சில ஆலோசனைகளையும் சொன்னார். பின்னர் அவரது அப்பா ஆகாஷ் ஆசைக்கிணங்க பிரபு சாலமன் இயக்கத்தில், அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களது ஒத்துழைப்புடன் இந்த படம் மிகப்பெரிய படமாக வந்துள்ளது. தயாரிப்பாளர் காஜா மைதீனுக்கு அல்லாவும், இயக்குனர் பிரபு சாலமன், இசை அமைப்பாளர் இமான் ஆகியோருக்கு இயேசுவும், எனது பேரன் விஜய் ஸ்ரீஹரி மாமன்னன் ராஜராஜ சோழனின் பரம்பரை என்பதால் அவரது ஆசியும் எப்போதும் இருக்கும் என்றார்.

- Advertisement -

Read more

Local News