நடிகை பிரனிதா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் தகவலைப் புகைப்படங்களோடு பகிர்ந்துள்ளார். நடிகை பிரனிதா தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற தோற்றமில்லை என்றாலும் அழகான நடிகையான இவர், நட்சத்திர நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. .


ஆனால் பெரிதாக அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். ஹங்கமா – 2 என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து கவனிக்கப்பட்டார்.


ஆனால், திருமணம் செய்தபின் சினிமாவிலிருந்து விலகினார். பிரனிதாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், தான் மீண்டும் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பதை பிரனிதா அறிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.