Saturday, September 14, 2024

எல்லா பட வாய்ப்புகளுமே கடவுள் எனக்கு கொடுத்த வரம்… கோட் பட நடிகை மீனாட்சி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய்யுடன் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘தி கோட்’ படம் பான் இந்தியா படமாக செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படமும் அதே மாதம் வெளியாகிறது. தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறேன். வருண் தேஜ் ஜோடியாக ‘மட்கா’ படத்திலும் நடிக்கிறேன்.

எல்லா பட வாய்ப்புகளுமே கடவுள் எனக்கு கொடுத்த வரம். நான் நடிக்கும் எல்லா படங்களுமே பான் இந்தியா படங்கள். இதை நினைக்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. இளம் நடிகர்களுக்கும், சீனியர் நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என்றார்.

- Advertisement -

Read more

Local News