Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ட்ரடிஷனல் சேலையில் க்யூட்டான ஃபோட்டோ ஷூட்… ரசிகர்களை மெய்மறக்கச் செய்த ஹன்சிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது காந்தாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த மைத்திரி வெப் தொடர் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்து காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார், விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், புடவையில் அவர் அழகான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News