Tuesday, November 19, 2024

கோட் இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே ? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் 2-வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

‘தி கோட்’ படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் விழாவை நடத்த படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் அமைப்பை தொடங்கி கலந்து கொள்ளும் முதல் இசை விழா என்பதால் விழாவில் என்ன நடக்குமென்று அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News