Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிங்க நடை…கையில் துப்பாக்கி… மிரட்டலான சிரிப்பு… சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான SURIYA44 ஸ்பெஷல் வாழ்த்து வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று (ஜூலை 23] நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், சூர்யா 44 படத்தின் அப்டேட் நேற்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

இந்நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தபடி சூர்யா 44 படத்தின் அதிரடியான கிலிம்ஸ் வீடியோ நாளிரவு 12.12 மணிக்கு வெளியாகியுள்ளது. காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் இந்த வீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது. துப்பாக்கியை கேமராவின் முன் நீட்டி சூர்யாவின் சிக்நேச்சர் சிரிப்புடன் முடியும் இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.

- Advertisement -

Read more

Local News