Saturday, September 14, 2024

இந்தியன் 2 எப்படி இருக்கு என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் கூறிய பதில் என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் குறித்தும், தனது வரவிருக்கும் படங்களான ‘கூலி’ மற்றும் ‘வேட்டையன்’ பற்றியும் பதில் அளித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கேரளாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள், ‘இந்தியன் 2’ படம் பார்த்தீர்களா படம் எப்படி இருக்கு என்று கேட்டனர், அதற்கு அவர், படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அவர், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன என்றார். அவர் பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

Read more

Local News