Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நோ ஜிம்… நோ வொர்க் அவுட்… 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக மாதவன் சொன்ன சீக்ரெட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வசீகரிக்கும் அழகிய தோற்றம், காண்போரை கவர்ந்திழுக்கும் அழகான சிரிப்பு என தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு இந்தியில் இஸ் ராத்கி சுபஹ் நஹி என்ற படத்தில் நடித்த மாதவன். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான நடிகராக மாறினார் மாதவன். அலைபாயுதே என்ற அற்புத படைப்பை தொடர்ந்து, கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் நடித்தார். அந்த படமும் மாதவனுக்கு மற்றுமொரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. 

அதன் பின், ரன், பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால், ஜே ஜே , ஆயுத எழுத்து, போன்ற ஹிட் படங்களில் நடித்து வந்தார். திடீரென தமிழ் சினிமாவில் காணாமல் போன மாதவன் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மாறா போன்ற படங்களில் நடித்து இன்றைய 2கே கிட்ஸின் பேவரைட்டாகவும் மாறினார்.

சமீபத்திய பேட்டியில் அதில், உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு போவது, உடற்பயிற்சி செய்வது என எந்த மாதிரியாக உடற்பயிற்சியையும் நான் செய்யவில்லை. அதற்கு பதிலாக, உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன், 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன், மாலை 6:45 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன். இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News