இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் படம் ‘டபுள் ஐ ஸ்மார்ட்’. ராம் பொதினேனி, காவ்யா தாபர், சஞ்சய் தத் நடித்துள்ளனர். மணி ஷர்மா இசை அமைத்துள்ளார், பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஒரு பார்ட்டி பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு மணி ஷர்மா பூர்வீக நாட்டுப்புற இசையுடன் மேற்கத்திய இசையையும் சேர்த்து அமைத்துள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச், கீர்த்தனா ஷர்மா ஆகிய மூவரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
இதில் ராம் பொதினேனியுடன் காவ்யா தாபர் கவர்ச்சியாக ஆடியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியீடு ஆகிறது.