எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து 8 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். ஆந்தாலஜி கதைகளாக உருவாகியுள்ள இத்தொடருக்கு ‘மனோரதங்கள்’ எனப் பெயரிட்டுள்ளனர். நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிஜூ மேனன், நதியா, பார்வதி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கு, நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். இத்தொடர், வருகிற ஆக.15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதன் அறிமுக நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயாணன் ஆசிப் அலியிடம் விருது வாங்க மறுத்து இயக்குநரிடம் கேட்டு வாங்கியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மன்னிப்பு கேட்டு அவர் பதிவிட்டாலும் சமூக வலைதளத்தில் ஆசிப் அலிக்கு ஆதரவு பெருகிவருகின்றன. இதனை தொடர்ந்து அமலா பால் உடன் லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் லெவல் கிராஸ் படக்குழு படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்தனர். இதில் அமலா பால், ஆசிப் அலி, இயக்குநர் அர்பாஸ் வந்திருந்தனர். ஆசிப் அலிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இதில் நடிகை அமலா பால், நாம் வாழ்க்கையில் எதிர்பாராத பல சூழ்நிலைகளை சந்திப்போம். மக்கள் சில நேரங்களில் நம்மை கீழிறக்க முயற்சிப்பார்கள். ஆனால் நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொருத்தது. ஆசிப் அலியை நினைத்து பெருமையாக இருக்கிறேன். எனது மிகவும் விருப்பமான நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி” எனப் பேசினார்.