தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவின் ஐகான் எனக் கூறுவது முற்றிலும் பொருத்தமானதுதான். நடிகராகவேண்டும் என சென்னையை நோக்கி வந்த பாரதிராஜாவின் திரை வாழ்க்கை மிகவும் பெரியது. 16 வயதினிலே தொடங்கி கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் யாருமே கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.அனைத்து படங்களும் 200 முதல் 300 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, பாரதிராஜாவை மாபெரும் இயக்குநராக உச்சத்தில் அமரவைத்தது.
காலங்கள் பல கடந்தும் தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பின் மூலம் பங்காற்றி வருகிறார் பாரதிராஜா.இந்நிலையில்தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இன்று 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.