திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் காட்டுபவர். இவரது சித்தப்பா நடிகர் அருண் பாண்டியன் என்பதனால், இவருக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால், சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது இவருக்கு ஜோக்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சமுத்திரக்கனுக்கு ஜோடியாகவும், இரண்டு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்தார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும், ரம்யா பாண்டியனுக்கு குறிப்பிடத்தகுந்த படவாய்ப்புகள் வரவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்தார்.
மேலும், மணிரத்னத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை, ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படாத கதாநாயகியாக இருந்த ரம்யா பாண்டியன், தற்போது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களையும் டைட்டான உடையில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.